Thaman

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யின் 65வது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.

Advertisment

இந்த நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, விஜய்யின் 66வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்க, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது, இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் படக்குழு ஈடுபட்டுவரும் நிலையில், ‘தளபதி 66’ படத்தின் இசையமைப்பாளர் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தளபதி 66’ படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக, நடிகர் விஜய்யின் 65வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவதாக இருந்தபோது அப்படத்திற்கு இசையமைக்க தமனை ஒப்பந்தம் செய்திருந்தது படக்குழு. பின்னர் சம்பளம் தொடர்பான விவகாரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து ஏ.ஆர். முருகதாஸ் விலகியதால் தமனுக்கு அந்த வாய்ப்பு கைநழுவியது குறிப்பிடத்தக்கது.