Advertisment

"அந்த மூன்று பேரின் மறைவு பற்றி அறிந்ததில் மிகவும் வருத்தமாக இருக்கிறது" - தமன் வேதனை!

gesdgs

பாலிவுட்டில் ஹிட்டாகி பின்னர் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்று ரீமேக் செய்யப்பட்ட படம் பிங்க். அமிதாப் பச்சனை தொடர்ந்து தமிழில் அஜித் நடித்திருந்தார். தமிழிலும் இது ஹிட் அடித்ததை தொடர்ந்து, பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். கடந்த வருடமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இன்று பவனின் பிறந்தநாளை முன்னிட்டு மோஷன் போஸ்டரும் ரிலீஸ் செய்துள்ளது படக்குழு. பவனின் பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் அவருடைய ரசிகர்கள் ஹேஸ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்ற நிலையில் நேற்று இரவு பவன் கல்யாணுக்கு கட்டவுட் வைக்கும்போது சரிந்து விழுந்ததில் மூன்று பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் தமன் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"மின்சாரவிபத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள் மூன்று பேரின் மறைவு பற்றி அறிந்ததில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. உயிர்களை இழந்த எனது சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல். அவர்களின் குடும்பங்களுக்கு இதை தாங்க நிறைய பலம் கிடைக்கட்டும். சிகிச்சை எடுத்து வரும் மற்றவர்கள் விரைவாக மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறியுள்ளார்.

Advertisment

thaman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe