/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/adharvaa.jpg)
கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ஆடுகளம் நரேன், ஜெகன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில்,பல்வேறு பிரச்சினைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் வெளியாகியுள்ளது அதன்படி, 'தள்ளிப் போகாதே' திரைப்படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது. இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)