fhsdbsfdb

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை, கடந்த மார்ச் மாத இறுதியில் நடைபெற்றது. இதையடுத்து 'தளபதி 65' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சமீபத்தில் ஜார்ஜியா சென்றார்.

Advertisment

அங்கு ஒரு மாதமாக நடைபெற்ற படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து நடிகர் விஜய் சென்னை திரும்பினார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் வேலை நடந்துவந்தது. அங்கு விஜய், பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க இருந்தனர். இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கரோனா பரவலின் தீவிரம் காரணமாக இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பைப் படக்குழு தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.