Thalapathy70 produced by dhoni entertainment

சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி, ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம், விளம்பரம் நடிப்பது, படம் தயாரிப்பது என அடுத்த கட்டத்தை நோக்கியும் பயணித்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில் தோனி என்டர்டைன்மெண்ட்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவர், கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' ('Blaze to Glory) என்ற ஆவணப்படத்தையும், 'தி ஹிடன் இந்து' (The Hidden Hindu) என்ற புராணத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தையும் தயாரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தோனி தன்னுடையதயாரிப்பு நிறுவனத்தின் மூலம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களைதயாரிக்க அதிக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் தோனி, நடிகர் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியின் லக்கி எண் 7 என்பதால் விஜய்யின் 70 வது படத்தை தயாரிக்கிறாராம். ஆனால் படத்தின் இயக்குநர், மற்ற விவரங்கள் எதுவும் முடிவாகவில்லை என்று சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்தஅறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.