Thalapathy68 pooja videos out now

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 68 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்படிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விஜயதசமியை முன்னிட்டு தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு பூஜையின் வீடியோவை, படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ் மற்றும் சென்னை 600028 படத்தில் நடித்தஅரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜிஉள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். யுவனின் பின்னணிஇசையுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.