களத்தில் இறங்கிய லோக்கி அண்ட் டீம்; வைரலாகும் விஜய் புகைப்படம் 

thalapathy67 movie squad photos goes viral

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர்தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்துதளபதி 67 படத்தைலோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியானமாஸ்டர்திரைப்படம் பெரும்வரவேற்பைபெற்ற நிலையில்இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில்லோகேஷ் கனகராஜ் தீவிரம் காட்டி வரும் நிலையில் விஜய் தளபதி 67 படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விரைவில் எஞ்சியுள்ள வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்துதளபதி 67 படத்தில் விஜய் கவனம் செலுத்தவுள்ளாராம்.

actor vijay lokesh kanagaraj thalapathy 67
இதையும் படியுங்கள்
Subscribe