'தளபதி 66' படத்தில் விஜய்யின் நியூ லுக்... வைரலாகும் புகைப்படம்

thalapathy66 movie vijay new look goes viral

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகாமந்தனா நடித்துவருகிறார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில், யோகி பாபு, சரத்குமார் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாகஷியாம் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன்இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத் புறப்பட்டுசென்றார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய் தளபதி ஸ்டைலானதாடியுடன் உள்ளார். ஒரு வேலை இது தளபதி 66 படத்தின் நியூ லுக்காக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் இந்த புகைப்படத்தை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

actor vijay rashmika mandana thalapathy 66 Vamshi Paidipally
இதையும் படியுங்கள்
Subscribe