Advertisment

ஹாய் செல்லம்... விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் - வைரலாகும் நியூ க்ளிக்

thalapathy66 movie vijay and prakash raj photo goes viral

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஹைதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'தளபதி 66' படப்பிடிப்பில் விஜய்யுடன்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில்பகிர்ந்த பிரகாஷ் ராஜ், "ஹாய் செல்லம்ஸ், வி ஆர் பேக்" என்று குறிப்பிட்டுள்ளார். வெள்ளை நிற தாடியுடன் சற்று மாறுபட்ட புதிய லுக்கில் விஜய் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய், பிரகாஷ் ராஜ் கூட்டணியில் வெளியான கில்லி, போக்கிரி, வில்லு ஆகிய படங்கள் பெரும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

actor prakash raj actor vijay rashmika mandana thalapathy 66
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe