#Exclusive டெல்லியை காலி செய்யும் தளபதி64 படக்குழு..! 

பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளது.

vijay

dbvds

அங்கு 3 கல்லூரிகளில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், கடந்த வாரத்தில் அங்கே காற்று மாசு அதிகரிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஆரம்பித்த படப்பிடிப்பு தொடர்ந்து காற்று மாசுக்கு நடுவே இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தளபதி64 படக்குழு வரும் நவம்பர் 27ஆம் தேதியோடு டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சிக்மங்களூர் செல்லவிருக்கின்றனர். அங்கே தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

lokesh kanagaraj thalapathy 64
இதையும் படியுங்கள்
Subscribe