பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்து, தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அங்கே பிரபல கல்லூரியில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அங்கே காற்று மாசு அதிகரிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்துவதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இருந்தும் படக்குழு மனம் தளராமல் கிடைத்த நேரங்களை பாயன்படுத்தி அவ்வப்போது படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முயற்சி செய்து வருகின்றனர். மேலும் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.