தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து அட்லீ-விஜய் மீண்டும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை என்பதால் தளபதி 63 என்று அழைக்கப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். யோகி பாபு, விவேக், கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோரும் உடன் நடிக்கின்றனர். மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் விஜய் படத்திற்கு இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

vijay

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த படத்தின் ஷூட்டிங் பின்னி மில், பிரசாத் ஸ்டூடியோஸ், வடசென்னையில் சில பகுதிகள் என சென்னை உள்ளேவே எடுக்கப்பட்டு வருகிறது. படபிடிப்பு தளத்திற்கு வரும் விஜய், நயன்தாரா ஆகியோரின் புகைப்படங்கள் ஷூட்டிங் பார்க்க வந்த பொதுமக்களால் எடுக்கப்பட்டு இணையம் முழுவதும் வைரலாகிறது.

இதுவரை சாதாரணமாக நடப்பது, கைகாட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்த நிலையில், படத்தில் விஜய் நடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே நயன்தாரா நடித்த காட்சி கசிந்ததும், படத்தில் விஜயின் பெயர் மைக்கேல் என்பதும் கசிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.