Thalapathy vijay's next film; Mass update released

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படத்தை முடித்துவிட்டு விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் தகவல் வந்துள்ளது. முன்னதாக விஜய் 68வது படத்தை அட்லீ இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து அண்மையில் தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டதாகப் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய்யின் அடுத்த பட இயக்குநர் லிஸ்டில் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார்.

Advertisment

வெங்கட் பிரபு, நாகா சைதன்யாவை வைத்து இயக்கிய'கஸ்டடி' படம் கடந்த 12 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படமும் கிச்சாசுதீப்பை வைத்து ஒரு படமும் வெங்கட் பிரபு இயக்க ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் விஜய்யைவைத்து இயக்க இருப்பதாக வந்த தகவல் உண்மையாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க உள்ளார். இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.