thalapathy Vijay fans' started new app regarding blood donation

விஜய், தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே 'விஜய் மக்கள் இயக்கம்' என்ற இயக்கத்தையும் நீண்ட ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜய். இந்த இயக்கம், குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில் 'விஜய் மக்கள் இயக்கம்' தற்போது புது முயற்சி எடுத்துள்ளனர். அதன் படி இந்த இயக்கம் ரத்த தானத்திற்காக 'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் ஒரு செயலியை தொடங்கியுள்ளனர். அதோடு விஜய் மற்றும் இந்த இயக்கத்தின் தகவல்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்கள் மற்றும் இணையதளம் உள்ளிட்டவை தொடங்கியுள்ளனர். இதனை இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளனர் 'விஜய் மக்கள் இயக்கம்'. விஜய் ரசிகர்களின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment