விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளைமுன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்கானபணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக விஷால் நடிக்கவுள்ளதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விஷாலிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கோலிவுட் வட்டாரத்தில், விஜய்யின் மீது உள்ள நட்பின் காரணமாக விஷாலும் இதற்கு ஓகே சொல்லிவிடுவார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்தத்தகவல் உறுதியாகும் பட்சத்தில், தொடக்கத்திலிருந்து ஹீரோவாக நடித்து வரும் விஷால் இப்படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.