தளபதி 67 டைட்டில் டீசர் எப்போது? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

thalapathy 67 update trisha on board  officially

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாகபடக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர்சாண்டி மாஸ்டர், இயக்குநர்மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத்தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே த்ரிஷா என தகவல் வெளியான நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.இதற்கு முன்பாககில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அறிவிப்பு விக்ரம் பட பாணியில் ஒரு டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் போஸ்டர் மட்டும்வெளியாகியுள்ளது. இருப்பினும் டைட்டில் டீசர் வரும் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

actor vijay lokesh kanagaraj thalapathy 67 trisha
இதையும் படியுங்கள்
Subscribe