thalapathy 67 update by lokeesh kanagaraj

Advertisment

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில்பொங்கல்திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில்வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிவிழாவைபடக்குழுவினர்கொண்டாடியுள்ளார்கள்.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும்நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' வகையில் உருவாகிறதாஎன்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்தது.

அந்தஅப்டேட்டுக்காகரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், எந்த நாட்களில்அப்டேட் வெளியாகும் என்பதைதற்போது லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரித்துள்ளார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால்படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

அந்த வகையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், "தளபதி 67 படம் நூறு சதவீதம் என் பட ஸ்டைலில் தான் இருக்கும். படத்தின் அப்டேட் பற்றிய ஹின்ட்மட்டும் தருகிறேன். அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது 3 தேதிகளில் வெளியாகும்" எனத்தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

முன்னதாக விஜய்யை வைத்து மாஸ்டர் படம் 50 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் எனவும் 50 சதவீதம் விஜய் ஸ்டைலில் இருக்கும் எனவும் தெரிவித்தநிலையில், தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் சொல்லியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், விக்ரம் பட பாணியில் ஒரு அறிவிப்பு டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாகதிரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.