Advertisment

'எல்.சி.யு' இல்ல 'எல்.இ.ஒ' - தளபதி 67-இல் லோகேஷின் புது சம்பவம்

thalapathy 67 title update

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Advertisment

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

Advertisment

இப்படத்தின் அப்டேட் இந்த வாரம் தொடர்ந்து வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர்சஞ்சய் தத் மற்றும்அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள்மிஷ்கின்,கவுதம் மேனன், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. அதன்படி 'லியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கையில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் படம் உருவாகிறது போல் தெரிகிறது. மேலும், வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் டீசர் தற்போது விஜய் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

trisha thalapathy 67 lokesh kanagaraj actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe