சிறப்புக் காட்சியில் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ்; தளபதி 67 குறித்து லோகேஷ் கனகராஜ்

thalapathy 67 lokesh kanagaraj update

தமிழ்த் திரையுலகின் ரசிகர்கள் தாண்டி பலரால்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெகு விமரிசையாக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் இன்று வெளியாகியுள்ளது. இரு நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமல்லாதுநிறையதிரைப் பிரபலங்களும் ரசிகர்களுடன் சிறப்புக் காட்சியைக் கண்டு மகிழ்ந்துள்ளனர்.

அந்த வகையில் விஜய்யின் வாரிசு படத்தைப் பார்க்கத்திரைப் பிரபலங்கள் திரிஷா, கீர்த்தி சுரேஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் வாரிசு படத்தைப் பார்த்த லோகேஷ்பின்பு செய்தியாளர்களிடம், "படம் எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. ரொம்ப என்ஜாய் பண்ணி பாத்தேன்" என்றார். அப்போது தளபதி 67 படத்தைப் பற்றி கேட்கையில், "இன்றுதான் வாரிசு படம் வெளியாகியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அப்டேட் வரும். விரைவில் தேதியை வெளியிடுவோம்" எனக் கூறினார்.

எனவே விரைவில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தளபதி 67 படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது.

actor vijay keerthy suresh lokesh kanagaraj trisha varisu movie
இதையும் படியுங்கள்
Subscribe