'ஆள் வந்தாச்சு அப்டேட் எங்கே'? லோகேஷிடம் விஜய் ரசிகர்கள் கேள்வி

thalapathy 67 lokesh kanagaraj back to twitter

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கான பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் திரும்பி வரும்போது அடுத்த பட அறிவிப்புடன் வருவேன் என சொல்லியிருந்தார். இந்நிலையில் 67 நாட்களுக்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் ட்வீட் எதுவும் செய்யாமல் மற்றொரு வீடியோவிற்கு லைக் செய்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள், லோகேஷ் லைக் செய்த பதிவை இணையத்தில் பகிர்ந்து, திரும்பி வந்தால் அப்டேட்டுடன் வருவேன் என சொன்ன நிலையில் ஆளு வந்தாச்சு அப்டேட் எங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே சிறிது இடைவெளிக்கு பிறகு லோகேஷ் சமூக வலைதளத்தில் ஆன்லைனில் வந்துள்ளதால் 'தளபதி 67' படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

actor vijay lokesh kanagaraj thalapathy 67
இதையும் படியுங்கள்
Subscribe