vijay

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார். தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் குறைந்த பிறகே இப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையே, விஜய்யின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. விஜய் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளியுடன் கைகோர்க்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குநர் வம்சியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசியதால் இத்தகவலின் உண்மைத்தன்மை ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

Advertisment

இந்த நிலையில், நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதி தன்னுடைய 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அன்றைய தினத்தில் 'தளபதி 66' படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகப் புதிய தகவலொன்று தற்போது வெளியாகியுள்ளது. விஜய் பிறந்தநாளன்று 'தளபதி 65' படம் தொடர்பான அப்டேட்டை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இத்தகவல் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.