'Thalapathy 66'; Dhanush movie actress joins Vijay's movie as the heroine

Advertisment

'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படம் குடும்ப பின்னணி படமாக உருவாகி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்து வந்த இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 'தளபதி 66' படத்தில் மெஹரீன் பிர்ஸாதா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக மெஹரீன் பிர்ஸாதா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெஹரீன் பிர்ஸாதா, சுசீந்திரன் இயக்கத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' படத்தின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.