'Thalapathy 66' crew gave the next update; Excited fans

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் பான் இந்தியா படமாக ஏப்ரல் 13-ஆம் தேதியன்று திரையில் வெளியாகவுள்ளது. இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதை தொடர்ந்து 'தளபதி 66'-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 'தளபதி 66'-வது படத்தின்கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் இசையமைப்பாளராக தமனும் ஒப்பந்தமாகியுள்ளனர்.

இந்நிலையில் 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்ற இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி பைடிப்பள்ளி, தில் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.