2.0 படத்தை தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுக்க மும்முரம் காட்டினார். இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டு, ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. பின்னர், சில காரணங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் முழுக்க அரசியலில் இறங்கிவிட்டதால் இனி இந்த படம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றுதான் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

thalapathy 65

Advertisment

Advertisment

இதனால் ஷங்கர் அடுத்து விஜய்யை வைத்து இயக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் மாநகரம் இயக்குனருடன் இணைந்து பணிபுரிய இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

‘விஜய் 64’ படத்தை தொடர்ந்து ஷங்கர் விஜய்யை வைத்து முதல்வன் 2 படத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. மீண்டும் தமிழ் திரையுலகில் தலை தூக்கியுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களை வைத்து தற்போது படம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதைபோல முன்னணி இயக்குனரான ஷங்கருடனும் இணைந்து ஒரு படம் எடுக்க அவர்கள் யோசனையில் இருப்பதாகவும் அதனால் விஜய்- ஷங்கர் இணைந்து உருவாக இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் இப்படம் குறித்தான தகவல் வெளியாகலாம் என்று நெறுங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடிப்பில் உருவான படம் ‘முதல்வன்’.இந்த படத்தில் நடிக்க முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால், அவர் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரை அடுத்து விஜய்யிடம் கேட்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நடிகர் அர்ஜூனை வைத்து தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் சார்பில் படத்தை எடுத்து வெளியிட்டு மாபெரும் வெற்றியை பெற்றார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.