vijay

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கும்'தளபதி 65' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Advertisment

ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள நெல்சன் திலீப் குமார், படத்திற்கான நடிகர், நடிகை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி 65' படத்திற்கான பூஜையை சென்னையில் நடத்திவிட்டு, நடிகர் விஜய் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக நமக்கு நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.