மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 65 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த மாத இறுதியில் இப்படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கிய படக்குழு, முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு, 18 நாட்கள்வரை படப்பிடிப்பு நடத்திய படக்குழு, முக்கியமான சண்டைக்காட்சி மற்றும் விஜய்க்கும் பூஜா ஹெக்டேவுக்கும் இடையேயான ஒரு டூயட் பாடலையும் படமாக்கியதாகக் கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் திட்டமிடப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, இந்தியா திரும்பியுள்ளது. இன்று அதிகாலை நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியபோது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போது கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் இந்தியா முழுவதும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த கட்ட படப்பிடிப்பு உடனடியாக தொடங்கப்படுமா அல்லது இந்தியாவில் இயல்புநிலை திரும்பிய பிறகு தொடங்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.