‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் உள்ள நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 65' எனப் பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள படக்குழு, படத்திற்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இவர், மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
The gorgeous @hegdepooja onboard as the female lead of #Thalapathy65 !@actorvijay@Nelsondilpkumar@anirudhofficial#Thalapathy65bySunPictures#PoojaHegdeInThalapathy65pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures) March 24, 2021