Advertisment

கர்நாடகா மத்திய சிறைச்சாலையில்  ‘தளபதி 64’ டீம்...

பிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தலைநகர் டெல்லியில் நடந்து வருகிறது.

Advertisment

shimoga prison

இதில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வரும் நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் லீக்காகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் கதை கசிந்தது என்று பல கதைகள் சமூக வலைதளத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தில் பேராசிரியராக நடிக்கும் விஜய், நாற்பது வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாதவராக நடிப்பதாக படத்தில் பணிபுரியும் நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் படபிடிப்பு முடிந்தவுடன் படக்குழு ஓய்வு எடுத்துவிட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் மூன்றாம் கட்ட படபிடிப்பை தொடங்க இருக்கிறது.

கர்நாடகாவிலுள்ள சிமோகா என்னும் மாவட்டத்திலுள்ள் பழைய மத்திய சிறைச்சாலையில்தான் ஷூட்டிங் நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு கர்நாடகா அரசு வழங்கிய ஒப்புதல் அறிக்கையும் வெளியானது. இந்த ஷூட்டிங்கில்தான் ஆண்டனி வர்கீஸ் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.

thalapathy 64 shimoga
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe