பிகில் படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படம் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட் செய்யப்பட்டு தற்போது கர்நாடகாவில் சிமோகா மத்திய சிறையில் ஷூட் செய்யப்பட்டு வருகிறது.

Advertisment

vijay sethupathi

டிசம்பர் தொடக்கத்திலிருந்து இந்த பகுதியில் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள படக்குழு அடுத்த மாதம் வரை ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் சிமோகாவில்தான் எடுக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, கேக்கை எடுத்துக்கொண்டு சிமோகா ஷூட்டில் இருக்கும் விஜய் சேதுபதியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிறந்தநாள் என்ற விஷயம் தெரிந்த விஜய் சேதுபதி, அவருக்கு கேக்கை ஊட்டிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.