‘விஜய் படத்தைவிட்டு விலகினோமா?’- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

பிகில் படம் தீபாவளிக்கு பண்டிகையை முன்னிட்டு வருகிற 25ஆம் தேதி படம் ரிலீஸ் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படம் சுமார் ரூ.180 கோடி வரை பெரும் பொருட்செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

vijay

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து மாநகரம், கைதி ஆகிய இரு படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டு முதல் கட்ட ஷூட்டிங்கும் முடிந்து, 2ஆம் கட்ட ஷூட்டிங் டெல்லியில் நடக்க இருப்பதாக படக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தளபதி 64 படத்தை தயாரிக்கும் விஜய்யின் நெருங்கிய உறவினரின் சேவியர் பிரிட்டோ தயாரிப்பு நிறுவனம். இப்படத்திலிருந்து விலகி, வேறு ஒரு தயாரிப்பாளர் இப்படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பு நிறுவனம், “இது ஒரு வதந்தி” என்று மறுப்பு தெரிவித்துள்ளது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றும் கூடுதல் தகவலை தெரிவித்துள்ளது.

actor vijay thalapathy 64
இதையும் படியுங்கள்
Subscribe