அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதனிடையே விஜய் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார். இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.

thalapathy 64

Advertisment

விஜய்யை வைத்து முதன் முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்க, கத்தி படத்திற்கு பின் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cc09f80f-0835-4031-8527-f9003ff72202" height="167" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_20.jpg" width="375" />

அதில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை எடுத்த இயக்குனர் ரத்தனகுமாரும் கலந்துகொண்டிருந்தார். அவர் இந்த படத்தில் லோகேஷுடன் இணைந்து திரைக்கதை எழுதுகிறார். இதுகுறித்து ட்விட்டரில்,என்னால் நம்ப முடியவில்லை. விஜய் அண்ணாவுடனும் என் நண்பன் லோகேஷ் கனகராஜுடனும் இணைந்து பணியாற்ற உள்ளேன். படக்குழுவுக்கு நன்றி என்று ரத்தனகுமார் பதிவிட்டுள்ளார்.