Skip to main content

‘தளபதி 63’ லீக்கான விஜய் புகைப்படம்... புதிய கெட்டப்பில் விஜய்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். 
 

vijay 63

 

 

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள், ஆர் ஆர் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார்.

 
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஐந்தாம் தேதி பதிவு செய்த ஒரு ட்விட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் இதுவரை வெளியான படங்களின் பெயர்கள் தெறி, மெர்சல் என்று வைக்கப்பட்டிருந்தது. தளபதி 63 படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்று அனைவரும் ஆவலாக உள்ளனர். முன்பு இப்படத்திற்கு மைக்கேல், சிஎம்( கேப்டன் மைக்கேல்) என்று வைக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. பிகில் என்ற அந்த பெயர் இந்தியளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய்யின் புதிய கெட்டப்பில் ஒரு புகைப்படம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவி வேட்டியில் விஜய்... வெளியானது பிகில்....

Published on 21/06/2019 | Edited on 21/06/2019

நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அட்லியின் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

bigil

 

 

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து 120 நாட்களுக்கு மேல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் பிகில். காவி வேட்டியில் வயதான விஜய், கால்பந்தாட்டக்காரரான விஜய் உள்ளிட்ட இரு கதாபாத்திரங்களில் தோற்றம் அளிக்கிறார்.
 

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது போல் ட்விட்டில் தெரிவித்துள்ளனர். 


 

Next Story

‘வந்தால் அண்ணா, வராவிட்டால் பெரியார்’- சர்ச்சையில் விஜய்

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருகிறது. இதனை வருடா வருடம் விஜய்யின் ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
 

vijay

 

 

ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் ரசிகர்கள் வெவ்வேறு வகையில் போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஒட்டப்பட்ட விஜய்யின் பிறந்தநாள் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் நடிகர் விஜய்யுடன், அண்ணாவும் பெரியாரும் இருப்பதுபோல எடிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில், "நீங்கள் அரசியலுக்கு வந்தால் அறிஞர் அண்ணா, வராவிட்டால் பெரியார்" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது தான் சர்ச்சைக்கு காரணம்.
 

விஜய்யின் இந்த பிறந்தநாள் போஸ்டர் வைரலாகி வருவதால், மேலும் எதிர்ப்பு கிளம்பும் என்றே கருதப்படுகிறது.