kangana ranaut

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, படத்தை ஏப்ரல் 23-ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டது.

Advertisment

கரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 50 சதவிகித பார்வையாளர்களோடு இயங்க மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய சூழலை கவனத்தில் எடுத்த படக்குழு, பட ரீலிசை ஒத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில், தலைவி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. சில பாலிவுட் ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிட்ட நிலையில், படக்குழு இதனை மறுத்துள்ளது. மேலும், தலைவி திரைப்படம் திரையரங்கில்தான் முதலில் வெளியாகும் என்றும் பின்னரே ஓடிடி-யில் வெளியாகும் என்றும் விளக்கமளித்துள்ளது. தலைவி படத்தின் தமிழ்ப்பதிப்பு அமேசான் ப்ரைம் தளத்திலும் இந்திப்பதிப்பு நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது.