
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திலிருந்து ‘மழை மழை..’என்ற பாடலின் வீடியோதற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா இப்பாடலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கங்கனா ரணாவத் மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர், இப்படத்திற்கான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளதால், கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Follow Us