இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்துள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்னோட்டமாக படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது. எம்.ஜி.ஆர் கதாபாத்திரமும் ஜெயலலிதா கதாபாத்திரமும் காரில் பேசிக்கொண்டு செல்லும் அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.