Skip to main content

ஜெயலலிதா பிறந்தாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தலைவி’ படக்குழு!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் ஏ.எல். விஜய் 'தலைவி' என்றொரு படத்தை எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடிக்கிறார். இவ்விருவரின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரும் அண்மையில் வெளியாகி ரசிகளின் வரவேற்பை பெற்றது.
 

kangana ranaut


 

 

இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படக்குழு ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது. அதில் ஜெயலலிதா அரசியலுக்கு வந்த புதிதில் இருக்கும் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் கங்கனாவின் கெட்டப் அமைந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயலலிதாவின் நகைகள்; கர்நாடகா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Karnataka court action order on Jayalalithaa's Jewellery

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியில் இருந்த பொழுது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 1999லிருந்து 96 ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த பொழுது அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது பெங்களூர் நீதிமன்றம். ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஐந்து பெட்டிகளில் கர்நாடகா அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடுவதற்குப் பதிலாக வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தமிழக உள்துறை செயலாளர் ஆஜராகி, கர்நாடகா வசம் உள்ள ஜெயலலிதாவின் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு கூறியது. மேலும், இந்த வழக்கு செலவு கட்டணமாக ரூபாய் 5 கோடியை கர்நாடகா அரசுக்கு தமிழக அரசு செலுத்தவும் என்று கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஜெயலலிதாவின் பொருட்களை நாளை (06-03-24) தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருந்தது. 

இந்த நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘ஜெயலலிதா வாரிசுகள் நாங்கள் தான். ஜெயலலிதா நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எங்களுக்கு வழங்க வேண்டும். எனவே, ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. 

Karnataka court action order on Jayalalithaa's Jewellery

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அளித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா நகைகளைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

Next Story

திருச்சியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Welfare assistance on the occasion of Jayalalitha birthday in Trichy

திருச்சி புறநகர் வடக்கு  மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் திருவானைக்காவல் பகுதி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. திருவானைக்காவல் தெப்பக்குளம் பகுதியில் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. 

பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் டைமன் திருப்பதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் மனோகரன், வட்ட செயலாளர் பொன்னர், கலைமணி, மகேஸ்வரன், எஸ்.கே. ராஜு, கொளஞ்சி, பேரவை செயலாளர்கள் வீரகுமார், சுடர்மதி மணிமாறன், மிட்டாய் முருகேசன், பிரஸ் வெங்கடேசன், ஐயப்பன், சீனி முகமது உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.