Advertisment

‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thalaivii

இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி திரைப்படம் உருவாக்கியுள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றதையடுத்து, படத்தை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால், திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் எழுந்தது.

Advertisment

பின், ‘தலைவி’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த படக்குழு, ‘தலைவி’ திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என உறுதியளித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ‘தலைவி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

Arvind Swamy Kangana Ranaut
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe