Advertisment

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புதிய அறிவிப்பு; குழப்பத்தில் ரஜினி ரசிகர்கள்

thalaivar169 update out now

Advertisment

'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தலைவர் 169' படத்தில் ரஜினிகாந்த், நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கவுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார். இத்தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் உறுதி படுத்திருந்தார்.இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தறிக்கவுள்ள நிலையில் நீண்ட நாளாக எந்த விதமான அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ்நிறுவனம் ஸ்டார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாளை காலை 11 மணிக்கு புதிய அப்டேட் ஒன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இது எந்த படத்தின் அப்டேட் என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர். இதனிடையே சன் பிக்சர்ஸ் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்தை தயாரித்துள்ளது. ஒருவேளை அந்த படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என்றும்தனுஷ் ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் ஸ்டார் என்றால் என்றுமேரஜினி தான் எனக் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

sun pictures. Thalaivar 169 ACTOR RAJINI KANTH
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe