Advertisment

ஒரே நாளில் களமிறங்கிய ரஜினி - அஜித்

thalaivar 170 vidaamuyarchi movies start shoot today

அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பல முறை தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், சில காரணங்களால் அது ஆரம்பிக்கப்படவில்லை. கதாநாயகியாக த்ரிஷா, வில்லனாக சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் இன்று துவங்கவுள்ளதாக தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அஜித்குமார் ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் த்ரிஷாவும் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அஜர்பைஜானில் இருப்பதாக பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இன்று படப்பிடிப்பு துவங்கி நடைபெறும்என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே லைகா தயாரிக்கும் மற்றொரு படமான ரஜினியின் 170வது படம் இன்று கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்று விடாமுயற்சி படப்பிடிப்பும் தொடங்குவதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், விரைவில் லைகா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR AJITHKUMAR trisha vidamuyarchi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe