thalaivar 170 pooja ceremony photos

Advertisment

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கொச்சியில் தொடங்கியுள்ளது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதுவரை துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் கமிட்டாகியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிவித்து ரஜினிகாந்த் போஸ்டர் காலை வெளியானது. அதில் ரஜினிகாந்தின் லுக் ஸ்டைலாக அமைந்திருந்தது. அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் எனப்படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்பட்டத்தின் பூஜை கேரளா திருவனந்தபுரத்தில் நடந்ததாகத்தெரிவித்து, அது தொடர்பான புகைப்படங்களைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் விளக்கேற்றும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு புகைப்படத்தில் மஞ்சு வாரியர், ஜி.எம். சுந்தர், விஜே ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர்.

Advertisment

இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார் ரஜினி.