/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_63.jpg)
நெல்சன் இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க, முதன்மை கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், விக்ராந்தும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், லைகா நிறுவனம் தயாரித்து வரும் லால் சலாம் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரஜினிகாந்த் ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் உருவாக்கவுள்ள தனது 170 வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலை படக்குழு தற்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டகுபதி ஆகியோர் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகவுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பிரபலங்களும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “‘ஜெயிலர்’ படம் எதிர்பார்க்காததை விட பெரிய வெற்றி பெற்றுள்ளது. எனது 170 வது படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும். இன்னும் தலைப்பு வைக்கவில்லை; விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வரும். படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. அதற்காகத்தான் தற்போது நான் செல்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)