ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தார்பார் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்குள் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

thalaivar 168

Advertisment

Advertisment

விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து இயக்குனர் சிவா படம் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் தள்ளிப்போனதால் ரஜினியின் படத்தை எடுக்க கமிட்டாகியுள்ளார்.

ரஜினியின் 168வது படமாக உருவாக இதில் டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை ரஜினி தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் இன்று தலைவர் 168 படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. இணையத்தில் அந்த புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பூஜையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்ளவில்லை.