சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisment

கலகலப்பான அம்சங்களுடன் கணவன் மனைவி உள்ளிட்ட குடும்ப உறவுகளை பேசும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் குடும்ப ரசிகர்கள் படத்தை ரசித்து வந்தார்கள். உலகளவி இப்படம் ரு.75 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கில் இப்படம் ‘சார் மேடம்’ என்ற தலைப்பில் டப் செய்யப்பட்டு கடந்த 1ஆம் தேதி வெளியானது. ஆனால் போதிய வரவேற்பை பெறவில்லை. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.