உத்தம வில்லன் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் சபாஷ் நாயுடு, தலைவன் இருக்கின்றான் உள்ளிட்ட படங்களை உருவாக்க இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்பின் அரசியல் வருகையையொட்டி விஸ்வரூபம் 2 படத்தை மட்டும் வெளியிட்டார். சபாஷ் நாயுடு படம் கைவிடப்பட்டுவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

Advertisment

kamal hassan

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபின், தலைவன் இருக்கின்றான் படத்தை ராஜ்கமல் தயாரிப்பில் கமல்ஹாசன் இயக்க உள்ளார் என்று மீண்டும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியானது. மேலும் இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisment

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகை ரேவதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.