சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவன் தலைவி’. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் ‘பொட்டல முட்டாயி’, ‘அகாச வீரன்’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு ஏற்பட்டது. படத்தின் டைட்டில் டீசர் கடந்த மே மாதம் வெளியாகியிருந்தது.

ஜூலை 25ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. அப்போது படம் கணவன் மனைவி எடுக்கும் விவாகரத்து முடிவு குறித்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மாஸ்டர் டிகிரி முடித்த நித்யாவுக்கும் பரோட்டா மாஸ்டராக இருக்கும் விஜய் சேதுபதிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பின்பு அவர்களுக்கும் நடக்கும் சண்டை, சமாதானம், காதல் போன்றவற்றை நடக்க ஒரு கட்டத்தில் சண்டை முற்றிப் போய் நித்யா, எங்களை பிரித்து விடுங்கள் என சொல்கிறார். 

இருவருக்கும் பெரியோர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. இறுதியில் விவாகரத்து முடிவை நித்யா கைவிட்டாரா. மீண்டும் சேர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து வாழ்ந்தாரா என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது. பாண்டிராஜ் படங்களில் வழக்கமாக வரும் குடும்ப நகைச்சுவை காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இதிலும் இடம் பெறுகிறது. கிராமத்து பின்னணியில் அந்த மண்மனம் மாறாத காட்சியமைப்புடன் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது.