Advertisment

'தலைநகரம் 2' படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்!

Thalainagaram 2

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம்வந்த சுந்தர் சி, கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். சுராஜ் இயக்கிய இப்படத்தில், சுந்தர் சி, வடிவேலு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகின்றன.

இந்த நிலையில், ‘தலைநகரம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்று (23.09.2021) பூஜையுடன் தொடங்கியுள்ளன. இரண்டாம் பாகத்திலும் சுந்தர் சிநாயகனாக நடிக்க, வி.இசட். துரை இயக்குகிறார். இவர், நடிகர் அஜித் நடிப்பில் உருவான ‘முகவரி’, சிம்பு நடிப்பில் உருவான ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் ஆவார். ரைட் ஐ தியேட்டர்ஸ் சார்பில் எஸ்.எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.

சுந்தர் சி, வி.இசட். துரை உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்தப் பூஜை நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

sundar c
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe