Advertisment

முதல்வர் நாற்காலி பின்னணியில் உருவாகியுள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸ்

Thalaimai Seyalagam trailer released

Advertisment

வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலைவையான விமர்சனத்தையே பெற்றது.

ad

இந்த நிலையில் தற்போது ‘தலைமைச் செயலகம்’ என்ற தலைப்பில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளார். இந்த சீரிஸீன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில் இந்த சீரிஸின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், தமிழக அரசியல் களத்தின் பின்னணியில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைசுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுவதோடு அதற்காகத் தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்தக் கதை விரிய விரிய வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, பின்பு பல உண்மைகள் வெளிவருகிறது. இதை சஸ்பென்ஸ், த்ரில்லர் கலந்து சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

vasantha balan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe