அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தான் தற்போது நம்ம தல அஜித் குமார் நடித்துள்ளார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisment

c

இந்த நிலையில், உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,தல ரசிகர்கள் படம் வெளியாக இருக்கும் திரையரங்கம் முன்புஅஜித்தின் சிலையை வைத்து மாஸ் காட்டி அசத்தியுள்ளனர். பொதுவாக அஜித் படம் என்றால், பால் அபிஷேகம், பட்டாசு என்று கொண்டாடும் ரசிகர்கள் இப்போதெல்லாம் அவரது சிலையை வடிவமைத்து திரையரங்குகள் வைத்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

h