Advertisment

‘அஜித் 60’யும் ரீமேக்தானா? ரசிகர்கள் புலம்பல்...

ajith kumar

Advertisment

பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் செம ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் ரீமேக் செய்கிறது. தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார், டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். எச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார்.

விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் அஜித் போனி கபூர் நிறுவனத்திற்கு இரண்டு படம் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் முதல் படமாக பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார். இதனை அடுத்து இரண்டாவது படம் எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிப்பார் என்று சினிமா வட்டரத்தில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படமும் ரீமேக் என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. ஆனால், இது தொடர்பாக படக்குழுவோ, அஜித் தரப்போ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை.

‘ஹெப்தா: த லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தின் உரிமத்தை போனி கபூர் வாங்கியிருக்கிறார். இந்த படத்திலும் அஜித் நடிக்க விருப்பம் காட்டுவதால், பிங்க் ரீமேக்கை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படமாக இது இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடித்து வரும் படமும் ரீமேக், அடுத்து அவர் நடிப்பதும் ரீமேக்கா என்று ரசிகர்களை இந்த வதந்தி புலம்பச் செய்துள்ளது.

Boney kapoor thala 59 ajith kumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe