Skip to main content

‘அஜித் 60’யும் ரீமேக்தானா? ரசிகர்கள் புலம்பல்...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019
ajith kumar


பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வெளியான பிங்க் செம ஹிட் அடித்தது. தற்போது இந்த படத்தை தமிழில் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனம் ரீமேக் செய்கிறது. தமிழில் அமிதாப் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார், டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்கிறார். எச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். 
 

விஸ்வாசம் படத்தை அடுத்து நடிகர் அஜித் போனி கபூர் நிறுவனத்திற்கு இரண்டு படம் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் முதல் படமாக பிங்க் ரீமேக்கில் நடிக்கிறார். இதனை அடுத்து இரண்டாவது படம் எச்.வினோத்தின் சொந்த கதையில் நடிப்பார் என்று சினிமா வட்டரத்தில் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது அஜித் நடிக்க இருக்கும் அடுத்த படமும் ரீமேக் என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. ஆனால், இது தொடர்பாக படக்குழுவோ, அஜித் தரப்போ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை.
 

‘ஹெப்தா: த லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தின் உரிமத்தை போனி கபூர் வாங்கியிருக்கிறார். இந்த படத்திலும் அஜித் நடிக்க விருப்பம் காட்டுவதால், பிங்க் ரீமேக்கை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படமாக இது இருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போது நடித்து வரும் படமும் ரீமேக், அடுத்து அவர் நடிப்பதும் ரீமேக்கா என்று ரசிகர்களை இந்த வதந்தி புலம்பச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படத் தயாரிப்பாளரின் கோரிக்கை - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இந்திய மக்களும் முதல் முறை வாக்காளர்களும் பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவரான இவர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருந்தார். இதனிடையே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் அவர், அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கருத்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.